Sendrayan : பொல்லாதவன் படத்தின் டிக்கெட்டை பிளாக்கில் விற்று போலீஸ் கிட்ட தான் சிக்கியதாக சென்ராயன் கூறிஉள்ளார்.
காமெடி கதாபாத்திரங்கள் வில்லன் கதாபாத்திரங்கள் என இந்த மாதிரி வேடங்களில் நடித்து முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சென்ராயன். இவர் பிக் பாஸ் சீசன் 2-வில் கலந்து கொண்டதன் மூலம் பலருடைய மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார் என்று கூட சொல்லலாம். இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் கூட இவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்த படம் என்றால் பொல்லாதவன் படத்தை கூறலாம்.
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான இந்த பொல்லாதவன் திரைப்படத்தில் சென்ராயன் பைக் திருடன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அவருடைய காட்சிகள் எல்லாம் குறைவாக இருந்தாலும் கூட அவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது என்றே சொல்லலாம்.
இந்த படம் வெளியான சமயத்திலும், படத்தில் நடித்து கொண்டு இருந்த சமயத்திலும் ஒரு அலுவலகம் ஒன்றில் வேலை செய்து கொண்டு இருந்தாராம். அந்த சமயம் அவருடைய முதலாளி 20 டிக்கெட் வாங்கி கொண்டு சென்ராயன் படத்தில் நடித்து இருக்கிறார் எல்லாரும் போகலாம் என்று கூறினாராம். அந்த சமயம் பார்த்து சென்ராயன் முதலாளிக்கு வெளி ஊரில் வேலை வந்து விட்டதாம்.
உடனே அவருடைய முதலாளி அந்த 20 டிக்கெட்டையும் கொடுத்து நீ உன்னுடைய நண்பர்களை அழைத்து சென்று படம் பாரு என்று கூறினாராம். சென்ராயன் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டு நாம் ஏன் நமது நண்பர்களுக்கு கொடுக்க வேண்டும் பேசாமல் பிளாக்கில் விற்று விடலாமே என்று கூறிவிட்டு பொல்லாதவன் படம் ஓடிய திரையரங்கு ஒன்றில் அதாவது காசி திரையரங்கிற்கு சென்று பொல்லாதவன் படத்தின் அந்த 20 டிக்கெட்டை பிளாக்கில் விற்றாராம். இதனால் போலீஸ் கிட்டவும் அவர் மாட்டிக் கொண்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கலகலப்பாக தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…