இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடிகை கோவை சரளா, அஸ்வின் குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள செம்பி திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்த நிலையில், ‘செம்பி’ திரைப்படத்தின் செய்தியாளர்கள் காட்சி இன்று சென்னையில் நடைபெற்றது. படத்தை பார்க்க பல்வேறு பத்திரிக்கை இணையதள செய்தியாளர்கள் கலந்து கொண்டனர். படம் மிகவும் அருமையாக இருந்தாலும் கூட, படத்தின் இறுதியில் ‘ உன்னிடத்தில் செலுத்தும் அன்பை நீ பிறரிடத்தில் செலுத்து – இயேசு’ என்ற வாசகம் வருவது செய்தியாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்களேன்- ஒரு நபருடன் தவறான உறவில் இருந்தேன்…உண்மையை போட்டுடைத்த அஞ்சலி.!
படம் முடிந்து வெளியே வந்தவுடன் செய்தியாளர்கள் சிலர் பிரபுசாலமனிடம் ” செம்பி திரைப்படம் கிருஸ்துவ மதப் பிரச்சாரத்தை வலியுறுத்தும் படமா…? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த பிரபுசாலமன் ” நான் கிருஸ்துவன் இது நான் கடைப்பிடிக்கும் விஷயம் என பதில் அளித்தார்.
இப்படி தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்க அது வாக்குவாதமாகவே மாறிவிட்டது. அப்போது செய்தியாளர் ஒருவர் பகவத் கீதையிலும் இதை போலவே ஒரு வசனம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பமீண்டும் பதிலளித்த பிரபு சாலமன், “பகவத் கீதையை படித்தவர்கள் அவ்வாறு கூறினால் நான் எதுவும் சொல்லப் போவதில்லை,கிறிஸ்தவம் மதமே இல்லை என்று கூறினார். இறுதியாக “படத்தில் வரும் அந்த வசனம் புண்படும் படி இருந்தால் தயவுசெய்து மன்னிச்சுக்கோங்க ” என கூறிவிட்டு சென்றார்.
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…
சென்னை : அண்ணாபல்கலை கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது…
சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றயை நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…
சென்னை: கடந்த நான்கு நாட்களாக ஏந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிவேகமாக வந்த கார்,…