‘லியோ’ ஷூட்டிங்கில் செம பார்ட்டி…! லோகேஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.! வைரல் போட்டோஸ் இதோ..!
மாநகரம்,கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் இன்று தனது 37-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
எனவே இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள். இதனை முன்னிட்டு டிவிட்டரில் #HBDLokeshKanagaraj என்ற ஹேஸ்டேக் தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது பிறந்த நாளை இன்று லியோ படக்குழுவுடன் கொண்டாடியுள்ளார். பிறந்த நாளை முன்னிட்டு காஷ்மீரில் செம பார்ட்டி ஒன்றும் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
#LokeshKanagaraj birthday celebration pics from the sets of #Leo????????#HBDLokeshKanagaraj pic.twitter.com/Vh7CBFMgG8
— CineBloopers (@CineBloopers) March 14, 2023
ஒரு புகைப்படத்தில் லோகேஷ் கனகராஜை சஞ்சய் தத் கட்டிப்பிடித்து கொண்டு இருக்கிறார். மற்றோரு புகைப்படத்தில் விஜயின் மேனஜர் ஜெகதீஸ் லோகேஷ் கனகராஜுக்கு முத்தம் கொடுக்கிறார். விரைவில் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.