செம மாஸான லுக்கில் நடிகர் அஜித்…வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!
நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக இந்த ஆண்டு வெளியான துணிவு திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக தன்னுடைய 62-வது திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார்.
தற்காலிகமாக “AK62” என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ள நிலையில், அவ்வபோது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று.
அந்த வகையில், தற்போது அஜித்குமார் உடல் எடையை குறைத்துக்கொண்டு மிகவும் ஸ்டைலான லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் அஜித் வெள்ளை நிற சட்டையில் கூலிங் க்ளாஸ் உடன் மாஸாக இருக்கிறார். எனவே புகைப்படத்தை பார்த்த அவருடைய ரசிகர்கள் “AK செம லுக்கில் இருக்கிறாரே” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் அஜித் தனது 62-வது திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு 2 ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு செல்லவுள்ளார். இந்த பயணத்திற்கு #rideformutualres (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.