இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை பொன்னியின் செல்வன் 2 படைத்துள்ளது.
பொன்னியின் செல்வன் 2
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன் 2.
unknown nodePS2 [Image Source : Twitter/ @LycaProductions]
முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாக்க மிகப்பெரிய ஹிட் ஆன, நிலையில், இரண்டாவது பாகம் இந்த ஆண்டு வெளியானது. வெளியாகி 14 நாட்களை கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
300 கோடி வசூல்
unknown nodePS2 MOVIE [Image source : file image ]
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியான நாளில் இருந்து உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்திருந்தது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா கடந்த 8-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்படி, படம் 300 கோடி வசூல் செய்திருந்தது.
புதிய சாதனை
இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வசூலில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. அது என்னவென்றால், இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதனை லைக்கா நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
unknown node