அடடா..! செம கியூட்..மகன்களுடன் நயன்தாரா…வைரலாகும் புகைப்படங்கள்.!!
குழந்தைகளுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் இன்று தங்களுடைய முதலாவது ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகிறார்கள். இதே தினத்தில் (ஜூன் 9) கடந்த ஆண்டு இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடந்தது. இந்நிலையில், இன்று திருமண நாளை கொண்டாடி வரும் இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதனையடுத்து, இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் நயன்தாரா தனது இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
மேலும் நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டதை தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் வாடகை தாய் மூலம் 2 குழந்தைகளைப் பெற்று கொண்டார்கள்.
இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ‘உயிர் ருத்ரோனில் என் சிவன்’ (Uyir Rudronil N Shivan), எனவும் மற்றோரு குழந்தைக்கு ‘உலக் தைவிக் என் சிவன்'(Ulag Dhaiveg N Shivan) என தங்களுடைய குழந்தைகளின் பெயர்களையும் அறிவித்தார்கள். என்பதும் குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram