நண்பர்களே அது உண்மை இல்லை! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்வராகவன்!

selvaraghavan

நடிகர் தனுஷின் 50-வது திரைப்படத்தினை அவரே இயக்கி அவரே முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் தனுஷுடன் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் செல்வராகவன் எழுதியதாகவும், அந்த கதையை தனுஷ் இயக்கமட்டும் செய்கிறார் எனவும் தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, அந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செல்வராகவன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.

மார்க்கெட்டும் போச்சு தேதியும் போச்சு! ‘லால்சலாம்’ படத்தால் நொந்து போன விஷ்ணு விஷால்!

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது ” நண்பர்களே, ‘ராயன்’ படத்திற்கு நான் ஸ்கிரிப்ட் எழுதியதாக செய்திகள் வந்துள்ளன. எனக்கும் ‘ராயனின்’ ஸ்கிரிப்ட் அல்லது ஸ்கிரிப்டிங் செயல்முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். இது முற்றிலும் தனுஷின் ட்ரீம் ஸ்கிரிப்ட், இப்போது அவர் அதை தனது சொந்த படத்தில் உருவாக்கியுள்ளார்.

உங்கள் எல்லோரையும் போல நானும் ராயன் படத்தை திரையரங்குகளில் பார்க்க காத்திருக்க முடியாது. என் சகோதரர் தனுஷ் மற்றும் அவரது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக பெருமைப்படுகிறேன்” என கூறியுள்ளார். இதன் மூலம் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்