மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வேடனாக தோன்றும் சீதக்காதி படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற ஹிட் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் தான் சீதக்காதி படத்தை இயக்குகிறார். கலைக்கும் வயதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை கதைக்களமாக வைத்து உருவாகி வருகிற இப்படத்தில் விஜய் சேதுபதி 80 வயதுடைய முதியவர் தோற்றத்தில் நடிக்கிறார்.சமீபத்தில் இந்த விஜய்சேதுபதியின் வயதான தோற்றம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மூத்த நடிகை அர்ச்சனா நடித்து வருகிறார். இவர்களுடன் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், மகேந்திரன், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் தோற்றம் அதிக பேசப்பட்டு வரும் நிலையில் படக்குழு இதற்காக ‘பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ உள்ளிட்ட படங்களுக்கு மேக்கப் மேனாகப் பணியாற்றிய கேவின் ஹானோவை ஒப்பந்தம் செய்துள்ளது.
விஜய்சேதுபதியின் 25-வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்தப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அடுத்தகட்டமாக படத்தின் சென்சார் குறித்த தகவலையும், விஜய்சேதுபதி வேடன் போல் தோன்றும் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். சென்சாரில் இந்தப் படம் ‘யூ’ சான்றிதழைப் பெற்றிருக்கிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.இந்த தகவலை நடிகர் விஜய்சேதுபதி தனது ட்வீட்டர் பக்கத்தில் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
DINASUVADU
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…