நடிகை மனிஷா யாதவிற்கு இயக்குனர் சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது பற்றி மனிஷா யாதவும், சீனு ராமசாமியும் மாறி மாறி பதில் பேசி வருகிறார்கள். குறிப்பாக மனிஷா யாதவ்க்கு டார்ச்சர் கொடுத்ததாக தகவல்கள் வெளியான உடனே சீனு ராமசாமி தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் ஒன்றை கொடுத்திருந்தார்.
அதில் ” இவங்க தான் என்னால சினிமா விட்டே போயிடுடடாங்கன்னு அண்ணன் ஒருத்தர் சொல்லுறார். ஒரு குப்பை கதை ஆடியோ விழாவில் நன்றி சொல்றாங்க 10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க… இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வரும்” என கூறியிருந்தார்.
அதற்கு பதிலடி கொடுத்த நடிகை மனிஷா யாதவ் ” ஒரு குப்பை கதை இசை வெளியீட்டு விழாவில் அங்கு எல்லாரும் வந்த காரணத்தால் நான் எல்லாருக்கும் நன்றி சொன்னேன். அந்த மேடையில் சீனு ராமசாமியும் அமர்ந்திருந்த காரணத்தால் அவருக்கும் நன்றி சொன்னேன். மற்றபடி 9 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த எந்த விஷயத்தையும் மாற்றவே முடியாது. அப்போ என்ன சொன்னேனோ அதை தான் இப்போதும்.
சீனு ராமசாமி டார்ச்சர்? நான் எதையும் மறக்கவில்லை! மௌனம் களைத்த மனிஷா யாதவ்!
என்னிடம் அவமரியாதையாக நடந்து கொண்ட ஒருவரிடம் இணைந்து நான் ஏன் வேலை செய்யப்போகிறேன்? சீனு ராமசாமி முதலில் உண்மையை பேசுங்கள் நான் எதையும் மறக்கவில்லை” என மிகவும் கோபத்துடன் பதிவிட்டு இருந்தார். இவர் இப்படி பேசியவுடன் இந்த விவகாரம் குறித்து ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் சீனு ராமசாமி சார் இது உண்மையா? என கேள்வி எழுப்ப தொடங்கினார்கள்.
இதனையடுத்து, இன்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் சீனு ராமசாமி இடம் பொருள் ஏவல் படப்பிடிப்பிற்கு வந்த முதல் நாள் ஏன் முதல் ஷாட்டில் 28 டேக் வாங்கினார் எனவும், தன்னுடைய சம்பளத்தில் ஒரு லட்சம் நஷ்ட ஈடாக பெற்றுக்கொண்டார் எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது ” இடம் பொருள் ஏவல் படப்பிடிப்பிற்கு வந்த முதல் நாள் மணிஷா ஏன் முதல் ஷாட்டில் 28 டேக் வாங்கினார்.படப்பிடிப்பு தளத்தில் உதவிட வந்த மூத்த நடிகையர் வடிவுக்கரசி அவர்களிடம் கோபித்து கடுஞ்சொல் வீசினாரே ஏன்?விஷ்ணு விஷால் ஜோடியாக நடியுங்கள் என நானும் அண்ணாமலை பீலிம்ஸ் கணேஷ் அவர்களும் கேட்ட பொழுது ஏன் மறுத்தார் ?
என் சம்பளத்தில் ஒரு லட்சம் நஷ்ட ஈடாக பெற்றாரே ஏன்..?மூன்று நாட்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தந்த ஹோட்டலில் தன் தயாருடன் தங்கிருந்த மனிஷா அவர்களை கடைசி ஒரு நாள் காலையில் படப்பிடிப்பில் சந்தித்தேன்.அந்த 28 டேக் மேக்கிங் வீடியோவுக்கு காத்திருக்கிறேன். தெய்வம் அருளனும் இருப்பினும் உங்களோடு திரும்ப பணி புரிய விரும்பினேன்” என கூறியுள்ளார்.
சென்னை : தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான டெல்லி கணேஷ் வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு காலமானார். அன்னாரது…
சென்னை : உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த முத்த நடிகர் டெல்லி கணேஷின் (80) மறைவு பெரும்…
சென்னை : அரசு முறைப் பயணமாக 2 நாள் சுற்றுப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகரில் கள ஆய்வை நேற்று…
விருதுநகர் : எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்த அறிக்கையில், அத்தியாவசியமற்ற செலவுகளை…
சென்னை : நடிகர் டெல்லி கணேஷின் மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,சமூக வலைதளைத்தில் திரைத்துறை…
விருதுநகர் : குமாரசாமி ராஜா அலுவலகத்தில் ரூ.77.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து…