சீனு ராமசாமியை டார்ச்சர் செய்தததா யுவன் ஷங்கர் ராஜா தரப்பு?!

மாமனிதன் படத்திற்கான இயக்குனர் சீனு ராமசாமிக்கு முழு சம்பள தொகையும் கொடுத்துவிட்டார்களாம் தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தரப்பு. படம் விரைவில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாம்.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படம் மாமனிதன். இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவும் இளையராஜாவும் இசையமைத்துள்ளனர். பட வேலைகள் அனைத்தும் முடிந்தும் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருந்துவருகிறது.
இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், யுவன் ஷங்கர் ராஜாவுக்கு சீனு ராமசாமி எடிட் செய்து கொடுத்த படத்தின் வெர்சன் பிடிக்கவில்லை. படம் நீளமாக இருப்பதாக உணர்கிறார். அதனால், படத்தில் இருந்து 2 பாடல்களை நீக்கிவிட்டார். மேலும், படத்தை வேறு எடிட்டரிடம் கொடுத்து வேறுமாதிரி எடிட் செய்து வைத்துள்ளார். என பலவாறு கூறப்பட்டது. மேலும்,சீனு ராமசாமிக்கு சம்பள பாக்கி வேறு இருந்ததாக கூறப்பட்டது.
ஆனால், தற்போது வெளியான தகவலின் படி, சீனு ராமசாமிக்கு தற்போது சம்பளம் முழுதாக கொடுக்கப்பட்டு விட்டது. மேலும், படத்தை அவரிடமே ஒப்படைத்துவிட்டாகிவிட்டது. ஆதலால் படம் விரைவில் திரைக்கு வரும் என கூறப்படுகிறது. விரைவில் மாமனிதன் குறித்த அறிவிப்பு வரும் என நாம் எதிர்பார்க்கலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
April 18, 2025