நடிகர் ரஜினியை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டு தயாரிப்பாளர் தாணுவிடம் வாய்ப்பு கேட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேட்டி அளித்துள்ளார்.
நடிகர் ரஜினி ஒரு கன்னடர், அவர் தமிழகத்தில் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் ரஜினியை சீமான் மிக கடுஞ் சொற்களால் விமர்சித்தும் வருகிறார். இதனால் ஆங்காங்கே ரஜினி ரசிகர்களுக்கும் – நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அதாவது ஒரு அரசியல் படத்திற்கான கதையை தயார் செய்து தயாரிப்பாளர் தாணுவிடம் சில மாதங்களுக்கு முன்னர் கூறியதாக சீமான் கூறியுள்ளார். இந்த கதையில் ரஜினி நடித்தால் நன்றாக இருககும் என்று தாணு கூறியதாகவும் சீமான் தெரிவித்துள்ளார். உடனே ரஜினி உங்கள் நண்பர் தானே அவரிடம் பேசிப்பாருஙகள் என்று தாணுவிடம் கேட்டுக் கொண்டதாக சீமான் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதற்குள் ரஜினி அரசியல்பிரவேசம், அதற்கு எதிர்ப்பு என்று பிரச்சனையாகிவிட்டதாகவும் சீமான் கூறியுள்ளார்.
ஒரு அரசியல் படத்தை ரஜினியை வைத்து இயக்க தயாராக இருந்ததாக சீமான் கூறியுள்ளார். ஏன் சீமானின் அரசியல் படத்தில் நடிப்பதற்கு தமிழர்கள் யாருமே இல்லையா? சரத்குமார் சீமானின் நண்பர் தானே? அவரை வைத்து அரசியல் படம் எடுக்க கூடாதா? அப்படி என்றால் தமிழ், தமிழர் என்பதெல்லாம் வெறும் அரசியலுக்கு தானா? என்றெல்லாம் சீமானை நோக்கி கேள்விகள் எழுந்துள்ளன.
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை மாதம் ஒரு கும்பல்…