ரஜினியை வைத்து படம் இயக்க வாய்ப்பு கேட்ட சீமான்..!

Default Image

நடிகர் ரஜினியை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டு தயாரிப்பாளர் தாணுவிடம் வாய்ப்பு கேட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேட்டி அளித்துள்ளார்.

நடிகர் ரஜினி ஒரு கன்னடர், அவர் தமிழகத்தில் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் ரஜினியை சீமான் மிக கடுஞ் சொற்களால் விமர்சித்தும் வருகிறார். இதனால் ஆங்காங்கே ரஜினி ரசிகர்களுக்கும் – நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

Image result for சீமான்ரஜினி தூத்துக்குடியில் சமூகவிரோதிகள் என்று கூறியதே நாம் தமிழர் கட்சியினரைத்தான் என்றும் சொல்லப்படுகிறது. இந்த அளவிற்கு சீமான் ரஜினிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்று அவரது நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

Image result for ரஜினிஒரு தனியார் தொலைக்காட்சிக்கு சீமான் ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், தொகுப்பாளர் சீமானிடம் ஒரு கேள்வி கேட்கிறார். நடிகர் ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் இயக்குவீர்களா? என்பது தான் அந்த கேள்வி. இந்த கேள்விக்கு சீமான் அளித்த பதில் தொகுப்பாளரை மட்டும் அல்ல நாம் தமிழர் கட்சியினரையே அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

அதாவது ஒரு அரசியல் படத்திற்கான கதையை தயார் செய்து தயாரிப்பாளர் தாணுவிடம் சில மாதங்களுக்கு முன்னர் கூறியதாக சீமான் கூறியுள்ளார். இந்த கதையில் ரஜினி நடித்தால் நன்றாக இருககும் என்று தாணு கூறியதாகவும் சீமான் தெரிவித்துள்ளார். உடனே ரஜினி உங்கள் நண்பர் தானே அவரிடம் பேசிப்பாருஙகள் என்று தாணுவிடம் கேட்டுக் கொண்டதாக சீமான் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதற்குள் ரஜினி அரசியல்பிரவேசம், அதற்கு எதிர்ப்பு என்று பிரச்சனையாகிவிட்டதாகவும் சீமான் கூறியுள்ளார்.

ஒரு அரசியல் படத்தை ரஜினியை வைத்து இயக்க தயாராக இருந்ததாக சீமான் கூறியுள்ளார். ஏன் சீமானின் அரசியல் படத்தில் நடிப்பதற்கு தமிழர்கள் யாருமே இல்லையா? சரத்குமார் சீமானின் நண்பர் தானே? அவரை வைத்து அரசியல் படம் எடுக்க கூடாதா? அப்படி என்றால் தமிழ், தமிழர் என்பதெல்லாம் வெறும் அரசியலுக்கு தானா? என்றெல்லாம் சீமானை நோக்கி கேள்விகள் எழுந்துள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

hmpv live
Rajinikanth
earthquake nepal
mk stalin net exam
Kanguva
hmpv Ma. Subramanian
icc bgt 2024 2025