M.G.Ramachandran : எம்.ஜி.ஆர் தன்னுடைய மனைவிக்கு செய்த உதவியை பார்த்து என்.டி. ராமராவ் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் அரசியலில் இருந்தபோதும் சரி சினிமாவில் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கும்போது சரி மக்களுக்கும், சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் பணம் ரீதியாக உதவிகளை செய்து இருக்கிறார் என்றே சொல்லலாம். அப்படி தான் ஒரு முறை என்.டி. ராமராவ் மனைவி உடல் நலம் சரியில்லாத பொது பெரிய உதவியை செய்துள்ளார்.
அந்த சமயம் எம்ஜிஆர்க்கும் என்.டி. ராமராவ்க்கும் இடையே நல்ல பழக்கவழக்கம் இருந்தது. எனவே, இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வது வெளியே செல்வது என நண்பர்களாக பழகி வந்தனர். ஒருமுறை என்.டி. ராமராவ் மனைவி லட்சுமி பார்வதி உடல் நலம் சரியில்லாமல் இருந்தாராம். அந்த சமயம் என்.டி. ராமராவ் இல்லாததால் மருத்துவ ரீதியாக எம்.ஜி.ஆர் பெரிய உதவிகளை செய்தாராம்.
எம்ஜிஆர் தனக்கு தெரிந்த மருத்துவர் மற்றும் பாதுகாப்புக்காக சிலரை அவருடைய வீட்டிற்கு அனுப்பி அவரை நன்றாக பார்த்துக்கொள்ள சொல்லி தேவையான பல விஷயங்களையும் செய்து கொடுத்தாராம் . அதன் பிறகு மெல்ல மெல்ல என்.டி. ராமராவ் மனைவி குணமடைந்து வந்தாராம். பிறகு என்.டி. ராமராவ் ஊருக்கு வந்த பின் எம்ஜிஆர் செய்த உதவிகளை பார்த்து கண் கலங்கி விட்டாராம்.
பின் உடனடியாக எம்ஜிஆரை பார்ப்பதற்காக நேரிலே என்.டி. ராமராவ் சென்றுவிட்டாராம். நேரில் சென்று என்னுடைய மனைவிக்காக இந்த அளவிற்கு உதவி செய்தது என்னை நெகிழ வைத்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன் என்று தெரியவில்லை என ஆனந்த கண்ணீர் வடித்தாராம். அதன் பிறகு எம்ஜிஆரும் அவருக்கு விருந்தளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தாராம். இந்த தகவலை பத்திரிகையாளர் எல்.வி. ஆதவன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…
சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…
மதுரை : பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக யூ-டியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் கோவை போலீசார்…
சென்னை: இந்திய அரசால் அங்கீகரிப்பட்ட 24 மொழிகளில், சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்படும் நூலினை எழுதிய நூலாசிரியருக்குத் தற்போது…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறை சார்பில் சிறந்த ரயில்வே ஊழியரின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக ரயில் சேவா…