எம்.ஜி.ஆர் செய்த பெரிய உதவி! ஆனந்த கண்ணீர் வடித்த என்.டி. ராமராவ்!

mgr and ntr

M.G.Ramachandran : எம்.ஜி.ஆர் தன்னுடைய மனைவிக்கு செய்த உதவியை பார்த்து என்.டி. ராமராவ் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார்.

எம்.ஜி.ஆர் அரசியலில் இருந்தபோதும் சரி சினிமாவில் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கும்போது சரி மக்களுக்கும், சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் பணம் ரீதியாக உதவிகளை செய்து இருக்கிறார் என்றே சொல்லலாம். அப்படி தான் ஒரு முறை என்.டி. ராமராவ் மனைவி உடல் நலம் சரியில்லாத பொது பெரிய உதவியை செய்துள்ளார்.

அந்த சமயம் எம்ஜிஆர்க்கும் என்.டி. ராமராவ்க்கும் இடையே நல்ல பழக்கவழக்கம் இருந்தது. எனவே, இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வது வெளியே செல்வது என நண்பர்களாக பழகி வந்தனர். ஒருமுறை என்.டி. ராமராவ் மனைவி லட்சுமி பார்வதி உடல் நலம் சரியில்லாமல் இருந்தாராம். அந்த சமயம் என்.டி. ராமராவ் இல்லாததால்  மருத்துவ ரீதியாக எம்.ஜி.ஆர் பெரிய உதவிகளை செய்தாராம்.

எம்ஜிஆர் தனக்கு தெரிந்த மருத்துவர் மற்றும் பாதுகாப்புக்காக சிலரை அவருடைய வீட்டிற்கு அனுப்பி அவரை நன்றாக பார்த்துக்கொள்ள சொல்லி தேவையான பல விஷயங்களையும் செய்து கொடுத்தாராம் . அதன் பிறகு மெல்ல மெல்ல என்.டி. ராமராவ்  மனைவி குணமடைந்து வந்தாராம். பிறகு என்.டி. ராமராவ் ஊருக்கு வந்த பின் எம்ஜிஆர் செய்த உதவிகளை பார்த்து கண் கலங்கி விட்டாராம்.

பின் உடனடியாக எம்ஜிஆரை பார்ப்பதற்காக நேரிலே என்.டி. ராமராவ் சென்றுவிட்டாராம். நேரில் சென்று என்னுடைய மனைவிக்காக இந்த அளவிற்கு உதவி செய்தது என்னை நெகிழ  வைத்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன் என்று தெரியவில்லை என ஆனந்த கண்ணீர் வடித்தாராம். அதன் பிறகு எம்ஜிஆரும் அவருக்கு விருந்தளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தாராம். இந்த தகவலை பத்திரிகையாளர் எல்.வி. ஆதவன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
sanjay rai kolkata
BiggBossTamilSeason8
DMK Candidate VC Chadrasekar - NTK Candidate Seethalakshmi
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai