ரசிகருக்காக அஜித் என்ன செஞ்சிருக்கார் பாருங்க… நல்ல ஆரோக்கியமா இருங்க.. சந்தோசமா இருங்க..
நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது “AK61” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். வங்கியில் பணம் கொள்ளையடிக்கும் சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கபட்டுள்ளது.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், அங்கு படப்பிடிப்பு நடந்து முடிந்தது. வரும் ஜூலை மாதம் இறுதியில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது அஜித் ஐரோப்பிய நாடுகளுக்கு தன்னுடைய பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதற்கான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி கடந்த வாரத்தில் இருந்தே வைரலாகி கொண்டே தான் வருகிறது. இதனையடுத்து, அஜித் தனது ரசிகருக்கு கடிதம் எழுதும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆம், ரசிகர் ஒருவருக்கு அஜித் போன் செய்து பிறந்தநாள் வாழ்த்து கூறி ஆச்சர்யப்படுத்தியுள்ளார். அந்த ரசிகருக்கு பிறந்த நாள் என்ற செய்தி அஜித்திற்கு தெரியவந்தவுடன், உடனே கால் செய்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதால், ரசிகர் மிகவும் சந்தோஷத்தில் அஜித்திடம் பேசியுள்ளார்.
அதன்பிறகு, ரசிகரிடம் அஜித் “ஆரோக்கியமா இருங்கள்.. சந்தோசமா இருங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் என வாழ்த்து கூறியுள்ளார். உடனே, ரசிகர் சார் நீங்க நல்லாருந்தா போதும் நாங்க நல்லா இருப்போம். நன்றி..நன்றி.. என உற்சாகத்துடன் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அந்த ரசிகருக்கு தனது கைப்பட பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து லெட்டர் எழுதி கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார்.
#AjithKumar #AK Video Clip ❤️????#Ak61 pic.twitter.com/yrSXX7MZ2T
— AK FANS COMMUNITY™ (@TFC_mass) June 29, 2022