தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது “வாரிசு” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான தமன் இசையமைத்து வருகிறார்.
இன்று விஜயின் 48-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியீடபட்டது. போஸ்ட்டரை பார்த்த ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் இருந்தார்கள். இதனையடுத்து, இன்று படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தற்போது படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் விஜய் சில குழந்தைகளுடன் இருக்கிறார். அவரை சுற்றி பொங்கலுக்கு உபயோகபடுத்தும் காய்கறிகள் காமிக்கபட்டுள்ளது. முதல் போஸ்ட்டரை விட இரண்டாவது போஸ்டர் இன்னும் அருமையாக இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம், யோகிபாபு, ஜெயசுதா சங்கீதா என பல சினிமா பிரபலங்கள் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…
திருச்சி: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளிவந்துள்ள "விடுதலை 2" இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல…
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…