அடுத்த வருஷம் வாரோம்! ‘தி பாய்ஸ் 4’ போஸ்டர்கள் வெளியீடு!
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் வெப் சீரிஸ் ‘தி பாய்ஸ்’. இதனுடைய முதல் சீசன் கடந்த 2019-ஆம் ஆண்டு பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வெளியானது. இதுவரை 3 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பான நிலையில், மூன்றுமே மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது.
மார்வெல், சூப்பர் ஹீரோக்களை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் இந்த வெப் சீரிஸில் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கும் காரணத்தால் இதற்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். 3 சீசன்களை தொடர்ந்து 4-வது சீசன் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதனுடைய 3-வது சீசன் வெளியாகி வெற்றி அடைந்து அடுத்த சீசன்கள் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகமாக்க வைத்தது. இதனால் 4-வது சீசன் எப்போது வெளியாகும் என பலரும் காத்திருந்த நிலையில், அடுத்த ஆண்டு வெளியாகும் என போஸ்ட்டரை வெளியீட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அடுத்த ஆண்டு அமேசான் பிரேமில் வெளியாகும் என்று மட்டும் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேதி என்னவென்று அறிவிக்கப்படவில்லை. விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 4-வது சீசனில் ஜாக் குய்ட், ஜெஸ்ஸி டி. அஷர், ஆண்டனி ஸ்டார், கரேன் ஃபுகுஹாரா, எரின் மோரியார்டி, டோமர் கபோன், கார்ல் அர்பன் உள்ளிட்ட பலரும் நடித்து இருக்கிறார்கள்.
Let’s light this candle. pic.twitter.com/Oq5Q2m5hIB
— THE BOYS (@TheBoysTV) November 8, 2023