தமிழில் உயிரின் உயிரே,அப்படி போடு, அண்டங்காக்கா கொண்டக்காரி, நினைத்து நினைத்து உட்பட பல ஹிட் பாடல்களை பாடிய பிரபல பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 53.
இவரது திடீர் மரணம் மக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து கே.கே. மரணத்திற்கு பல பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், நடிங்கர் கமல்ஹாசன் ட்வீட்டர் பக்கத்தில் “பன்மொழிகளிலும் பாடி ரசிகர்களை மகிழ்வித்த கேகே எனும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் அகால மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் ஆறுதல்கள்” என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில் ” என் “உயிரின் உயிரே” மறைந்தது. RIP பாடகர் கே.கே. அவருடைய கடைசிப் பாடலான “கொஞ்சி கொஞ்சி” பாடலை உலகமே புகழ்ந்து கொண்டிருக்கும் போது, அதிர்ச்சியான செய்தியைக் கேட்பது. நான் முற்றிலும் உடைந்து போயிருக்கிறேன், அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ட்வீட்டர் பக்கத்தில் ” சித்து மூஸ் வாலா & கே.கே மரணம் நம் நாட்டின் இசை சமூகத்திற்கு இது ஒரு சோகமான வாரம்.வாழ்க்கை கணிக்க முடியாதது & அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று எங்களுக்குத் தெரியாது, நீங்கள் KK ஐ இழக்க நேரிடும்” என பதிவிட்டுள்ளார்.
பாடகி ஸ்ரேயா கோஷல் ட்வீட்டர் பக்கத்தில் ” இந்தச் செய்தியை என்னால் மறக்க முடியவில்லை. எனது இதயம் துண்டு துண்டாக உடைந்தது. என் வாழ்க்கையில் நான் சந்தித்த மிகவும் அடக்கமான, மென்மையான, தூய்மையான மனிதர்களில் ஒருவர் கே.கே . கடவுளின் அன்பான குழந்தை மில்லியன் கணக்கான ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் வாழ்க்கையில் அன்பைப் பரப்ப அனுப்பப்பட்டது. இப்போது கடவுளுக்கு அவன் தேவையா? இவ்வளவு சீக்கிரமா?! கொடுமை!! அவரது குடும்பம் என்ன நடக்கிறது என்று கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
பாடகி ஸ்வேதா மோகன் ” கே.கே மரணம் அதிர்ச்சியூட்டும் மற்றும் முற்றிலும் பேரழிவு அவர் மிகவும் ஆச்சரியமாகவும் மாயாஜாலமாகவும் இருந்தார்… அவர் சீக்கிரம் போய்விட்டார் என்பது நியாயமற்றது… வாழ்வதற்கு இன்னொரு மனவேதனை” என வருத்தத்துடன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
நடிகர் மாதவன் “புகழ்பெற்ற பாடகர் கே.கே. தனது 53வது வயதில் காலமானார். இதயம் உடைந்தது….இன்று ஒரு அற்புதமான மனிதரையும் சிறந்த குரலையும் இழந்துவிட்டது. நிம்மதியாக இருங்கள் அண்ணா” என பதிவிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ” நிம்மதியாக இருங்கள் நண்பரே. அவ்வளவு பயங்கரமான இழப்பு. கே.கே.யின் மாயாஜாலக் குரலும் இசையும் என்றென்றும் நம்மிடையே எதிரொலிக்கும்” என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
பாடகி சித்ரா பிரபல பின்னணிப் பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத்தின் திடீர் மறைவு குறித்து அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…