அன்னைக்கு திட்டுனாங்க..இன்னைக்கு கொண்டாடுறாங்க…’டிரக் டீலர்’ யுவன்னா சும்மாவா!

yuvan shankar raja

கோட் : பொதுவாக விஜய் படத்தில் இருந்து எதாவது அப்டேட் வெளியானால் போது நெகட்டிவ் விமர்சனங்கள் ஒரு பக்கம் வருவதோடு மற்றோரு பக்கம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துவிடும். அப்படி தான் கோட் படத்தில் இருந்து கடைசியாக வெளியான ‘ஸ்பார்க்’ பாடல் கூட. படத்தின் மூன்றாவது பாடலான இந்த பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடி இருந்தார்.

பாடலை கங்கை அமரன் எழுதி இருந்தார். பாடல் கேட்க கேட்க ஒரு பக்கம் நன்றாக இருந்தாலும் கூட பல ரசிகர்களுக்கு முதலில் பாடல் பிடிக்கவில்லை. எனவே, வெளியான அந்த நாளில் இருந்து அதற்கு அடுத்த நாள் வரை படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை கடுமையாக ட்ரோல் செய்து பாடல் மிகவும் மொக்கை என்பது போல விமர்சனங்களை கிளப்பினார்கள்.

கோட் படத்திற்கு வில்லன் யுவன் சங்கர் ராஜா தான் என்பது போலவும் கடுமையாக விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள். மற்றோரு பக்கம் யுவன் சங்கர் ராஜாவின் ரசிகர்கள் இதற்கு மேல் எப்படி பாடல் போட முடியும்? என்பது போல கேள்விகளை எழுப்ப ஆரம்பித்துவிட்டனர். வெளியான முதல் நாளில் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தநிலையில், தற்போது பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது.

பாடலை கேட்டு வழக்கம் போல பலரும் சமூக வலைத்தளங்களில் நடனம் ஆடி வீடியோக்களை வெளியீட்டு வருகிறார்கள். மேலும், பாடல் கேட்க கேட்க நன்றாக இருக்கிறது தெரியாமல் திட்டிவிட்டோம்  டிரக் டீலர்னா சும்மாவா? என யுவன் சங்கர் ராஜாவை பாராட்டி வருகிறார்கள். இப்போது யூடியூபில் ஸ்பார்க்  பாடல் தான் ட்ரெண்டிங்கின் நம்பர் 1ல் இருக்கிறது.

மேலும், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த கோட் படத்தில் மீனாட்சி சவுத்ரி, மாளவிகா சர்மா, பிரசாந்த் தியாகராஜன், பிரபு தேவா, அஜ்மல் அமீர், பிரேம் ஜி, மோகன், யோகி பாபு, சினேகா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்