1956 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்துகொண்டிருந்தவரில் ஒருவர் நடிகை சாவித்ரி. அந்த சமயத்தில் இவருக்கு இருந்த ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருந்தது. அந்த சமயம் மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த சாவித்ரிக்கு எம்.ஜி. ஜெமினி கணேஷன் , சிவாஜி கணேஷன், உள்ளிட்ட பல டாப் நடிகர்களுக்கு ஜோடியாக படங்களில் நடித்தார்.
இந்நிலையில், முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருந்த காலத்திலே நடிகை சாவித்ரி தன்னுடைய வீட்டில் மிகப்பெரிய நீச்சல் குளம் ஒன்றை கட்டியுள்ளாராம். அதைப்போல, பல பொருட்கள் இடங்கள் என வாங்கி சம்பாதித்த பணத்தை அனைத்தையும் செலவு செய்தாராம். பிறகு சொந்தமாக படங்களை தயாரித்ததன் மூலம் தன்னுடைய சொத்துக்களை விற்றுவிட்டாராம்.
இந்த தகவலை பிரபல நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” லட்ச கணக்கில் சம்பாதித்து வீட்டில் நீச்சல் குளம் அமைத்த முதல் நடிகை சாவித்ரி தான். கொஞ்சம் கொஞ்சமாக பணங்களை சேர்த்து வைத்து இப்படி நீச்சல் குளம் கட்டி வாழ்ந்து கொண்டு இருந்தார்.
சில நடிகைகளை போல நடிகை சாவித்ரியும் சொந்தமாக படமும் இயக்கி தயாரித்தார். குறிப்பாக ஜெமினி கணேசனை வைத்து அவர் ஒரு படத்தை தயாரித்து இயக்கி இருந்தார். அந்த கதை நன்றாக இல்லை என்று ஜெமினி கணேசனும் சொன்னார் ஆனால், நடிகை சாவித்ரி கேட்காமல் செய்தார் படமும் சரியாக போகவில்லை இதனால் நடிகை சாவித்ரிவுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சில படங்களை தயாரித்திருந்தார். அந்த படங்களும் சரியான லாபத்தை கொடுக்காத காரணத்தால் சொத்துக்கள் அனைத்தையும் விற்றுவிட்டு நடிகை சாவித்ரி வாடகை வீட்டுக்கு வந்தார்” என கூறியுள்ளார். சொந்தமாக படங்களை தயாரித்து நடிகை சாவித்ரி சொத்துக்களை இழந்த தகவல் சோகத்தை கொடுத்துள்ளது. மேலும் சாவித்ரி கடந்த 1981-ஆம் ஆண்டு காலமானார். அவர் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் கூட அவர் நடித்த படங்கள் என்றுமே மக்கள் மனதில் அழியாத ஒன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…