சதுரங்க வேட்டை-2 படத்தில் நடித்ததற்கு இத்தனை நாள் சம்பளம் தராதற்கு வட்டி சேர்த்து தரவேண்டும் என ஹீரோ அரவிந்த் சாமி கூறுகிறாராம்.
H.வினோத் இயக்கத்தில் 2014இல் வெளியாகி நல்ல வெற்றியையும், பலரது பாராட்டுகளையும் பெற்ற திரைப்படம் சதுரங்க வேட்டை. இந்த திரைப்படம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடந்த பெரிய மோசடிகளை தோலுரித்து காட்டியது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் சில வருடங்களுக்கு முன்னர் அரவிந்த் சாமியை ஹீரோவாக வைத்து தொடங்கப்பட்டது. சதுரங்க வேட்டை-2 என தலைப்பு வைக்கப்பட்டு நிர்மல் குமார் என்பவர் இயக்கி வந்தார். திரிஷா ஹீரோயினாக நடித்து வந்தார்.
இந்த படத்தின் வேலைகள் கடந்த 2,3 வருடங்களாக நடைபெற்று வந்ததால், அரவிந்த் சாமிக்கு சம்பள பாக்கி இருந்துள்ளது. இதனால், அவரும் டப்பிங் பேசாமல் இருந்து வந்தார். கடைசியில் ஒரு பைனான்சியர் முன்னிலையில் சம்பளம் 50 லட்சம் என பேசி இறுதி செய்யப்பட்டதாம். அதற்கு அரவிந்த் சாமியும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், கடைசியில், அரவிந்த் சாமி அந்த 50 லட்சம் சேர்த்து இத்தனை நாள் தராததற்கு வட்டி போட்டு தர வேண்டும் என கூறிவிட்டாராம். சம்பள பாக்கிக்கு வட்டி கேட்ட கோலிவுட் நடிகர் இவர் தான் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…
சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…