Ghilli sister [file image]
Ghilli : கில்லி படத்தில் முதலில் தங்கை கதாபாத்திரம் கிடையாது தம்பி கதாபாத்திரம் தான் இருந்தது என சதீஷ் ஸ்டீபன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. இந்த திரைப்படத்தில் த்ரிஷா, ஆஷிஷ் வித்யார்த்தி, பிரகாஷ் ராஜ், தாமு, நாகேந்திர பிரசாத், ஜானகி சபேஷ், மயில்சாமி, நான்சி ஜெனிபர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.
இந்த கில்லி திரைப்படம் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன ஒக்கடு படத்தின் தமிழ் ரிமேக் தான். தமிழில் இந்த கில்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. படம் வெளியாகி 20 வருடங்களுக்கு பிறகு கூட கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த கில்லி திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக புவனா என்ற கதாபாத்திரத்தில் ஜானகி சபேஷ் என்பவர் நடித்து இருப்பார். ஆனால், படத்தில் முதலில் அந்த கதாபாத்திரமே கிடையாதாம். அந்த தங்கை கதாபாத்திரத்திற்கு பதிலாக முதலில் தம்பி கதாபாத்திரம் ஒன்று தான் இருந்ததாம். அந்த தம்பி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வைக்க்க அழகி படத்தில் சிறிய வயது பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்த சதீஷ் ஸ்டீபனிடம் தான் பேச்சு வார்த்தை நடைபெற்றதாம்.
படத்தில் அவர் நடிக்கவும் சம்மதம் தெரிவித்த நிலையில், அவரை வைத்து இயக்குனர் தரணி டெஸ்ட் ஷூட்டும் எடுத்தாராம். அந்த டெஸ்ட் ஷூட் எடுத்து முடித்த பிறகு தான் இயக்குனர் தரணி அந்த கதாபாத்திரத்தை தங்கையாக மாற்றி வைத்தால் நன்றாக இருக்கும் என யோசித்து மாற்றினாராம். இந்த தகவலை சதீஷ் ஸ்டீபன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…