தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி காமெடி நடிகர் பட்டியலில் இருப்பவர் நடிகர் சதீஸ். இவர் தயாரிப்பாளர்களுக்கு எந்தவித பிரச்னையும் கொடுக்கமாட்டார். தயாரிப்பாளரின் விருப்பத்திற்கேற்ப நல்லபிள்ளையாக நடந்துகொள்வார் என சினிமா வட்டாரத்தில் இவருக்கென நல்ல பெயர்தான் உண்டு.
ஆனால், சில நாட்களுக்கு முன்னர் ஒரு செய்தி காற்றில் பரவியது. அதாவது. தற்போது சதீஸ் ஷூட்டிங் வந்தால், தனது காரிலேயே இருந்துகொண்டு தனது உதவியாளரை வைத்து கேரவன் எப்படி இருக்கு என பார்த்துவிட்டு வர சொல்கிறார். கேரவன் சரியில்லை என்றால் வேறு கேரவன் மாற்ற சொல்கிறார் என செய்தி வெளியானது.
இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது சதீஸ் தரப்பு. அதாவது, அப்படி ஒரு சம்பவம் நடந்தது. ஆனால், அது கேரவனில் வசதி குறைவாக இருப்பதாக பார்ப்பதற்காக இல்லை. கொரோனா காலம் என்பதால் சானிடைசர் தெளிக்க சொல்லிவிடுவதாகவும், சதீஸ் வீட்டில் குழந்தை இருப்பதால் கவனமாக இருப்பதற்காக கேரவன் சுத்தமாக இருபதாக பார்க்க சொல்வதாகவும் சதீஸ் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…