பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்து கொண்ட சசிகுமார்.!
தமிழ் சினிமாவில் நல்ல இயக்குனர் நடிகராக அறிமுகமாகி தற்போது வரையில் நல்ல மனிதராக வளம் வருபவர் நடிகர் சசிகுமார். கிராமத்து கதைக்களங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார்.
தயாரிப்பாளராகவும் அறிமுகமான சசிகுமார், பாலா இயக்கத்தில் தரை தப்பட்டை படத்தில் நடித்து தயாரித்து இருந்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை. அதனால், கடனில் சிக்கி தவித்தார். அதன் பின்னர் வெளியான சசிகுமாரின் படங்களும் சரிவர போகாததால் ஒரு பெரிய வெற்றிக்காக தற்போது காத்துக்கொண்டிருக்கிறார்.
அவர் பெரிதும் நம்பிய Aஒரு படம் பொன்ராம் இயக்கிய எம்.ஜி.ஆர் மகன். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தியேட்டர் ரிலீசாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு OTTயில் ரிலீஸ் ஆனது.
நல்ல வேலையாக இந்த படம் OTTயில் ரிலீஸ் ஆனது என படக்குழு நிம்மதி பெருமூச்சு விடுகிறதோ இல்லையோ, சசிகுமார் நிம்மதியாக இருப்பார். காரணம் ஏற்கனவே பெரிய வெற்றிக்காக காத்திருக்கும் சசிகுமாருக்கு இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகியிருந்தால், தோல்வி அடைந்திருக்க அதிக வாய்ப்புள்ளது நல்ல வேலை OTTயில் ரிலீஸ் ஆகிவிட்டது. அதனால், சசிகுமார் தப்பித்துக்கொண்டார்.
சசிகுமார் நடிப்பில் அடுத்தடுத்து ராஜவம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.