ஜப்பானில் களமிறங்கபோகும் ஜி.வி.பிரகாஷ் திரைப்படம்!
அடங்காதே, 100% காதல், 4G, ஐயங்காரன், ஜெயில் என படங்கள் வரிசையாக தயாராகி வருகிறது நடிகர் ஜி.வி.பிரகாஷிற்க்கு! அவரது நடிப்பில் மேலும் ஒரு படமாக ராஜீவ்மேனன் இயக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி உள்ள திரைப்படம் சர்வம் தாளமயம்.
இப்படம் கர்நாடிக இசைகுடும்ப வகையை சாராத ஓர் நடுத்தர வர்கத்து இளைஞன், தனக்கு பிடித்த மிருதங்க இசையை கற்க எவ்வாறெல்லாம் புறக்கணிக்கப்படுகிறான். எந்த மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்கிறான் என படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.
இப்படம் தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளதாம். இதனை படக்குழு மகிழ்ச்சி பொங்க தங்களது இணைய பக்கத்தில் பகிர்ந்து வருகின்றன.
DINASUVADU