சர்கார் டீசர் வெளியான 10 நிமிடத்தில் ஒரு மில்லியன் பேர் பார்த்து ரசித்து உள்ளனர்.
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜயின் அசத்தலான நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் சர்கார் .இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
அந்த விழாவில் நடிகர் விஜய் பேசியது பல விமர்சனகளுக்குள்ளானது.மேலும் இயக்குனர் முருகதாஸ் பேசும்போது சர்கார் படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.அதன்படி வரும் 19ம் தேதி அதாவது இன்று ஆயுதபூஜையை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இன்று டீசர் வெளியாகியுள்ளது.இதை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டது.
சர்கார் டீசரில் விஜய்யின் வசனங்கள் பட்டைய கிளப்பியுள்ளது .குறிப்பாக ”ஐ ஆம் எ கார்ப்பரேட் கிரிமினல்..உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க இது தான் நம்ம சர்கார்ர்ர் …என்ற வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது . இதனால் தளபதி விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கினார்கள்.
இதன் எதிரொலியாக சர்கார் டீசர் வெளியான 10 நிமிடத்தில் ஒரு மில்லியன் பேர் பார்த்து ரசித்து உள்ளனர்.இதனை பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…