சர்க்கார் படத்தை வைத்து புதிய முயற்சியில் களமிறங்கிய இளம் தலைமுறையினர்….!!!
விஜய் நடித்துள்ள சர்கார் படமானது வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தை குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சர்க்காருக்கான சர்ச்சைகள் தொடர்ந்தாலும், எதிர்பார்ப்புகளும் மக்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.
இப்படம் குறித்த சாதனைகள் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக பரவி வருகிறது. தளபதிக்கு தமிழகம் தாண்டி பல ரசிகர்கள், ரசிகைகள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், இந்த படத்தின் பாடல்கள் வெளியானது. இதில் ஒரு விரல் புரட்சி பாடல் மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதனையடுத்து தற்போது, அந்த பாடல் வரிகளை கொண்ட டி-சார்ட் அடித்து தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் இளம் தலைமுறையினர்.
source : tamil.cinebar.in