சர்க்கார் படத்திற்கு தொடர்ந்து போடப்படும் கண்டிஷன்கள்…!!!
விஜய் நடித்துள்ள சர்கார் படமானது வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு பல எதிர்பார்ப்புகள், தடைகள் மற்றும் சர்ச்சைகள் என எல்லாத்தையும் தாண்டி இந்த படம் வெளியாகிறது.
தற்போது அரசு உத்தரவின்படி, சர்க்கார் படத்தின் பேனர்கள், போஸ்டர்களில் புகைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தால் அவற்றை உடனே அகற்ற வேண்டும் என திரையரங்க உரிமையாளர்களுக்கு சங்க தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.