சர்க்கார் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா…?
சர்கார் படம் நேற்று வெளியான நிலையில், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிகமான வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்த படம் தமிழகத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும் திரையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த படம் சென்னையில் ரூ.2.31 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது. இதற்க்கு முன் முதலிடத்தில் இருந்த காலா படம் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது. முதல் நாள் சென்னையில் காலா படத்தின் வசூல் ரூ.1.76 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.