விஜயின் சர்கார் பாடலிற்கு ஆடி ரசிகர்களை கவர்ந்த நடிகை வைரலாகும் வீடியோ…!!

Default Image

நடிகர் விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியாகிய  படம் தான் சர்கார். படத்தில் நடிகை  கீர்த்தி சுரேஷ் ஹூரோயினியாக நடித்தார் நடிகை வரலட்சுமி வில்லியாக நடித்தார், நடிகர் யோகி பாபு,நடிகர் ராதாரவி,நடிகரும் அரசியல்வதியுமான பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்து திரையரங்கில் வெற்றிகரமாக ஒடி வசூல் சாதனை படைத்தது சர்கார்.

Related image

மேலும் படம் வசூல் ரீதியாகவும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்து. படத்திற்கு வலுசேர்த்தது.படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும்  பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

Image result for அதுல்யா ரவி

இந்நிலையில் படம் வெளியாகி திரையாங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்ற சர்கார் தொடர்பான ஒரு சிறு தகவல்களையும்  ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.ஏனெனில் படத்தில் இடம்பெற்ற இலவச எரிப்பு மற்றும் ரசிகர்களின் இலவச எரிப்பு படு வைரலாக பரவியது.இதனிடையே படத்தில் இடம்பெற்ற ஓஎம்ஜி பொண்ணு என்ற பாடலுக்கு நடிகை அதுல்யா ரவி நடனமாடி இருக்கிறார்.

Related image

அந்த வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டு வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ விஜய் ரசிகர்கள் மத்தியில் பலரும் இணையத்தில் பகிர்ந்து ட்ரெண்டாக்கி  வருகின்றனர். இதற்கு நடிகை அதுல்யா ரவி நன்றி தெரிவித்துள்ளார். நடிகை அதுல்யா நடிகர் விஜயின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.

Related image

https://twitter.com/AthulyaOfficial/status/1063667931756879872

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்