அட இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை தமிழ் பிரபலத்தின் மகளா.?

Akshara Haasan

உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சரிகா தாக்கூரின் மகளும், ஸ்ருதிஹாசனின் சகோதரியுமான அக்ஷரா ஹாசன் இன்று தனது தாயாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சரிகா தாக்கூரை 1988 இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் மற்றும் இளைய மகளான அக்ஷரா ஹாசன் என இரண்டு மகள்களும் தமிழ் சினிமாவில் தங்களது நடிப்பை தொடர்ந்து வருகிறார்கள்.

தனது நடிப்பு வாழ்க்கையை நிறுத்திவிட்டு தனது கணவர் கமாலுடின் சென்னைக்கு வந்த சரிகா, கடந்த 2004-ல் தங்கள் திருமண உறவை முறித்துக்கொண்டனர். பின்னர், கமல்ஹாசனிடமிருந்து பிரிந்த சரிகா தாகூர், ஹிந்திப் படங்களில் நடிக்க தொடங்கினார்.  இன்று சரிகா தாக்கூரின் 63வது பிறந்தநாள், அவருக்கு சமூக வலைத்தளங்கில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், இளைய மகள் அக்ஷரா ஹாசன் சரிகாவின் இரண்டு அழகான புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.  அதில், “என் அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நெகிழ்ச்சி, வலிமை, கண்ணியம் மற்றும் கருணை ஆகியவற்றை வெளிப்படுத்திய உலகின் சிறந்த அம்மா.

பிக் பாஸ் கொடுத்த வரவேற்பு! பாடகர் யுகேந்திரனுக்கு அடித்த பெரிய ஜாக்பாட்!

உங்களைப் போன்ற ஒரு அம்மாவைப் பெற்றதற்கு ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நீங்கள் என் அம்மாவாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அண்டை வீட்டுக்காரர் அல்ல. மகிழ்ச்சி. பிறந்தநாள், அன்பான அம்மா. நீங்கள் சிறந்த மற்றும் பலவற்றிற்கு தகுதியானவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Akshara Haasan (@aksharaa.haasan)

முதல் புகைப்படத்தில் அக்‌ஷரா ஹாசன் குழந்தை பருவத்தில் இருப்பதையும், இரண்டாவது புகைப்படத்தில் சற்று வயதான அக்ஷரா தனது தாயுடன் விளையாட்டாக போஸ் கொடுப்பதை காணலாம். அக்ஷரா பகிர்ந்து கொண்ட இந்த புகைப்படம் இதுவரை யாரும் காணாத புகைப்படம்  என்பதால் இணையத்தில் வைரலாகி வருகிறது. சரிகா தாக்கூர் கடைசியாக 2022 இல் வெளியான உஞ்சாய் திரைப்படத்தில் நடித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்