சர்காரை முந்தவில்லை பேட்ட !!!
ரஜினியின் ‘ பேட்ட ‘ படம் கோலாகலமாக ஜனவரி மாதம் 10 ந்தேதி திரைக்கு வந்தது. இதனை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடி வருகின்றனர். ‘ பேட்ட ‘ படம் முதல்நாளில் 170 ஷோக்கள் சென்னையில் உள்ள திரையரங்கில் வெளியிடப்பட்டது. மேலும்’ பேட்ட ‘ படம் தமிழகம் முழுவதும் 16 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
ஆனால் சென்னையில் 1 கோடி தான் வசூல் செய்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் ‘ பேட்ட ‘படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ‘ பேட்ட ‘ குடும்ப படம் என்பதால் பல ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.
மேலும் இது சர்காரின் முதல் நாள் வசூலை பிடிக்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.’விஜய்யின் ‘ சர்கார் ‘ தமிழகம் முழுவதும் வெளி வந்த முதல் நாளில் 31 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.