விரைவில் மிரட்ட வருகிறது “சர்தார் 2”.! அசத்தலான அறிவிப்பு வீடியோவை வெளியிட்ட படக்குழு.!
இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடத்த 21-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “சர்தார்”. படத்தில் கார்த்தியுடன் லைலா, ராசி கண்ணா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தை பார்க்க கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். படம் மிகவும் அருமையாக இருப்பதால் படத்திற்கான வரவேற்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. வசூலிலும் இந்த திரைப்படம் பல சாதனைகளை படைத்தது வருகிறது.
இதையும் படியுங்களேன்- 4 நாட்களில் அடி தூள்..! “பிரின்ஸ்” வசூலை பத்த வச்சு பறக்கவிட்ட “சர்தார்”.!
அதன்படி, தமிழகத்தில் மட்டும் இந்த திரைபடம் வெளியான 5 நாட்களில் மட்டும் 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும், உலகம் முழுவதும் 40 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கார்த்திக்கு விருமன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து சர்தார் படம் மூன்றாவது வெற்றிப்படம் என்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இத்துடன் அவரக்ளுக்கு மேலும் உற்சாகம் அளிக்கும் வகையில், ஒரு அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், சர்தார் படம் முடியும்போது இறுதி காட்சியில் சர்தார் 2 என்று டைட்டில் வரும். இதனால் பலரும் இரண்டாவது பாகம் உருவாகுமா..? இல்லையா என்ற குழப்பத்தில் இருந்தார்கள். இதனையடுத்து. சர்தார் படத்தின் தயாரிப்பு நிறுவனம் பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியீட்டு சர்தார் படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாகும் என அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகவும் உற்சாகத்துடன் இருக்கிறார்கள்.
#Sardar ????
Once a spy, always a spy!
Mission starts soon!!#Sardar2 ????????@Karthi_Offl @Prince_Pictures @RedGiantMovies_ @Psmithran @gvprakash @lakku76 @RaashiiKhanna @rajishavijayan @ChunkyThePanday @george_dop @AntonyLRuben @dhilipaction @kirubakaran_AKR @DuraiKv pic.twitter.com/rVu5IxGRZp— Prince Pictures (@Prince_Pictures) October 25, 2022