நடிகர் கார்த்தி நடிப்பில் கடத்த 21-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “சர்தார்”. ஸ்பை த்ரில்லர் பின்னணியில் தண்ணீர் பிரச்சனைக்கு எதிராக பல விஷயங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தியுடன் லைலா, ராசி கண்ணா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தில் நடித்த அனைவரும் சிற்பானை நடிப்பை கொடுத்திருந்தார்கள் என்றே கூறலாம்.
இதையும் படியுங்களேன்- ரிலீசுக்கு முன் முரட்டு வியாபாரம்.! மிரண்டு போய் இருக்கும் கோலிவுட்..! விஜயின் “வாரிசு” வேட்டை ஆரம்பம்….
இந்த நிலையில், படம் வெளியான முதல் வாரம் (7 நாட்கள்) உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த படம் வெளியான 7 நாட்களில் உலகம் முழுவதும் 57 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். அதைப்போல தமிழகத்தில் மட்டும் படம் 40 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
வரும் நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் படத்திற்கான வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் விரைவில் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…