வெளியான 1 வாரத்தில் “சர்தார்” படத்தின் வசூல் எத்தனை கோடி தெரியுமா..? வெளியான சூப்பர் தகவல்.!

Default Image

நடிகர் கார்த்தி நடிப்பில் கடத்த 21-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “சர்தார்”. ஸ்பை த்ரில்லர் பின்னணியில் தண்ணீர் பிரச்சனைக்கு எதிராக பல விஷயங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

Sardar Moive Poster
Sardar Moive Poster [Image Source: Google]

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தியுடன் லைலா, ராசி கண்ணா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தில் நடித்த அனைவரும் சிற்பானை நடிப்பை கொடுத்திருந்தார்கள் என்றே கூறலாம்.

இதையும் படியுங்களேன்- ரிலீசுக்கு முன் முரட்டு வியாபாரம்.! மிரண்டு போய் இருக்கும் கோலிவுட்..! விஜயின் “வாரிசு” வேட்டை ஆரம்பம்….

Sardar Poster
Sardar Poster [Image Source: Twitter ]

இந்த நிலையில், படம் வெளியான முதல் வாரம் (7 நாட்கள்) உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த படம் வெளியான 7 நாட்களில் உலகம் முழுவதும் 57 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். அதைப்போல தமிழகத்தில் மட்டும் படம் 40 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும்  தகவல்கள் கசிந்துள்ளது.

Sardar2 Commencing Soon
Sardar2 Commencing Soon [Image Source: Google/cinebloopers]

வரும் நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் படத்திற்கான வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் விரைவில் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்