தளபதி 66 படத்தில் சரத்குமார் கதாபாத்திரம் இது தானா..?! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் புதிய தகவல்.!

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் தற்போது தனது 66 வது படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில், விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தை தமிழில் தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்குகிறார். விஜய்க்கு ஜோடியாக முதன் முதலாக ராஷ்மிகா நடிக்கிறார். பிரபல இசையமைப்பாளரான தமன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.
இந்நிலையில், இந்த படத்தின் பூஜை நடைபெறும் போது அதில் நடிகர் சரத்குமார் கலந்து கொண்டிருந்தார். அப்போதிலிருந்து ரசிகர்களுக்கு அவர் படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்ற குழப்பமும் எதிர்பார்ப்பும் அதிகமாகியது என்றே கூறவேண்டும்.
இதனையடுத்து, அவர் நடிக்கவுள்ள கதாபாத்திரம் குறித்த ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், இந்த படத்தில் சரத்குமார் விஜய்க்கு தந்தையாக நடிக்கவுள்ளாராம். இன தகவலை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025