கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவருடைய மறைவுக்கு மக்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள், திரைபிரபலங்கள் பலரும் நேரில் சென்று கண்ணீர் மல்க தங்களுடைய அஞ்சலியை செலுத்தினர். நேரில் வரமுடியாத பிரபலங்கள் பலரும் கேப்டனின் நினைவிடத்திற்கு வருகை தந்து தங்களுடைய மரியாதையையும் செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நேற்று ஜனவரி ( 19) சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் அழைக்கப்பட்டு இருந்தார்கள். இந்த இரங்கல் கூட்டத்திற்கு விஷால், ராதா ரவி, மன்சூர் அலிகான், சரத்குமார், எம்.எஸ்.பாஸ்கர் , கமல்ஹாசன், கருணாஸ், ஆர்கே செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள்.
விஜயகாந்த் மகன் படத்தில் நடிக்க தயார் – விஷால் பேச்சு.!
இதில் பங்கேற்று கேப்டன் விஜயகாந்த் குறித்து தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். அப்போது மேடையில் பேசிய சரத்குமார் ” இப்படியான ஒரு கூட்டத்தில் நாம் எல்லாம் கலந்துகொள்வோம் என்று நான் நினைத்து கூட பார்த்தது இல்லை. கேப்டன் விஜயகாந்த் மறைவு மிகப்பெரிய ஒரு இழப்பு. நானும் கேப்டனும் இணைந்து ‘புலன் விசாரணை’ படத்தில் ஒன்றாக நடித்திருந்தோம். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எனக்கு ஒரு முறை பலமாக அடிபட்டுவிட்டது.
பிறகு என்னை ஓய்வு எடுத்து விட்டு பிறகு படப்பிடிப்புக்கு வாருங்கள் என்று விஜயகாந்த் கூறினார். ஆனால்,நான் அதனை கேட்காமல் காயத்தில் மருந்து போட்டு விட்டு திரும்பி படப்பிடிப்பிற்கு வந்தேன். அப்போது விஜயகாந்த் என்னிடம் கடிந்து கொண்டார். அதன் பிறகு புலன் விசாரணை திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு எனக்கு தான் முதலில் பெயர் கிடைக்கும் என்று விஜயகாந்த் கூறினார். அந்த அளவிற்கு ஒரு பெருந்தன்மை யாரிடம் இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. அவரிடமிருந்து நாம் வள்ளல் குணம் மற்றும் பணிவு என பல விஷயங்களை கற்றுக் கொள்ளலாம்” எனவும் சரத்குமார் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து பேசிய சரத்குமார் வடிவேலு விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க வராதது பற்றி பேசியுள்ளார். இது குறித்தும் பேசிய அவர் ” விஜயகாந்த் மறைவுக்கு வடிவேலு வரவில்லை என்று சிலர் என்னிடம் கேட்டர்கள். வடிவேலு வரவில்லை உண்மை தான் ஆனால், விஜயகாந்த் குறித்து வடிவேலு தன்னுடைய வீட்டிலே அழுது இருக்கலாம்” எனவும் பேசியுள்ளார்.
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…