வரலட்சுமி : நடிகையும், நடிகர் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி நிக்கோலாய் சச்தேவ் என்பவரை நாளை திருமணம் செய்ய இருக்கிறார். நிக்கோலாய் சச்தேவ் மும்பையில் விலையுயர்ந்த ஓவியங்களை விற்பனை செய்யும் ஆர்ட் கேலரியை நடத்தி வரும் ஒருவர். இவர்களுடைய இரு வீட்டாரும் கலந்து பேசி இவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்க இருக்கிறார்கள்.
ஏற்கனவே, இந்த நல்ல விஷயத்தை ரசிகர்களுக்காக வரலட்சுமி அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து இருந்தார். இதனையடுத்து, திருமணம் நாளை நடைபெறுவதை ஒட்டி திருமண விழா கோலாகலமாக இரண்டு நாட்களுக்கு முன்பே தொடங்கியது. அதன்படி, கடந்த ஜூன் 30 ஆம் தேதி வரலட்சுமிக்கு மெஹந்தி விழா நடைபெற்றது.
அதற்கு அடுத்ததாக, ஜூலை 1 ஆம் தேதி, நடிகை மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரு சங்கீத விழாவை நடத்தினர். இதில் குடும்பமே ஒன்றாக இணைந்து நடனமும் ஆடினார்கள். இதற்கான வீடியோக்களும் கூட சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. நாளை இவர்களுடைய திருமணம் மிகவும் பிரமாண்டமான செலவில் தாய்லாந்தில் நடைபெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது சொந்த மகள் வரலட்சுமி திருமணத்திற்கு சரத்குமார் 10 பைசா கூட செலவு செய்யவில்லை என நடிகர் பயில்வான் ரங்கானதான் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” சரத்குமாரின் மகள் வரலட்சுமியின் திருமணம் பிரமாண்டமாக தாய்லாந்தில் நடக்கவுள்ளது. அங்கு நடக்கவுள்ள திருமணத்திற்கு இங்கு பலரையும் அவருடைய குடும்பத்தினர் அழைத்து வருகிறார்கள்.
தன்னுடைய திருமணத்தை அனைவரும் வியந்து பார்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக வரலட்சுமி வருங்கால கணவர் திருமண ஏற்பாடுகளை பிரமாண்டமாக செய்து வருகிறார்.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் திருமணத்தின் முக்கிய செலவுகள் அனைத்துமே அவருடைய மனமகன் ஏற்றுக் கொண்டிருக்கிறாராம். சரத்குமார் 10 பைசா கூட செலவு செய்யவில்லை எனவும் ‘பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…