saranya ponvannan [File image]
தமிழ் சினிமாவில் நாயகன் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி 80, 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை சரண்யா. இவர் அந்த காலத்தில் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டு இருந்த நிலையில், இன்றய காலத்தில் அம்மா, அத்தை போன்ற குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். ஹீரோயினாக நடித்து வந்த காலத்திலும் சரி இப்போது குணசித்ர வேடங்களில் நடிக்கும்போதும் சரி சரண்யாவின் நடிப்பு அனைவரும் கவர கூடிய வகையில் இருந்து வருகிறது.
இப்படி கலக்கி கொண்டு இருக்கும் நடிகை சரண்யா ஆபாசமா கெட்டப் போட்டு நடிக்கவே மாட்டேன் என்று அந்த காலத்திலே கூறியுள்ளார். அவருடைய ஒரு பேட்டியில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் நடிகையாக நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் இருந்தே எனக்கு ஆபாசமான கெட்டப் போடுவதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.
சினிமாக்காரர்களுக்கு வீடு வாடகைக்கு கிடைக்காதது இதுக்காக தான்! பயில்வான் சொன்ன பகீர் தகவல்!
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து தான் எனவே, அப்படி உடை அணிந்து கொண்டு நடிப்பவர்கள் எல்லாம் தப்பு என்று நான் சொல்லவரவில்லை. அப்படி உடைகள் அணிந்து கொண்டு நடிப்பது என்பது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம். எனவே, என்னை பொறுத்தவரை பள்ளிக்கூடம் படிக்கும் போதும் சரி, கல்லூரி படிக்கும்போதும் சரி அந்த மாதிரி கவர்ச்சியான உடை அணிந்துகொண்டது இல்லை.
எனக்கு தனிப்பட்ட முறையில் அந்த மாதிரி உடை அணிவது பிடிக்கவே பிடிக்காது. எனவே, நான் படங்களில் நடிக்கும்போது நான் போட்ட ஒரே ஒரு கண்டிஷன் இது மட்டும் தான். இதனை தவிர நான் வேறு எந்த கண்டிஷனும் போட்டது இல்லை. என்னுடைய அதிசயமா என்னவோ தெரியவில்லை அந்த மாதிரி படங்களும் எனக்கு வரவில்லை. யாருமே நீ அந்த மாதிரி உடை அணிந்தால் தான் இந்த படத்தில் நடிக்க முடியும் என்று சொல்லவில்லை.
நான் நடிக்கமாட்டேன் என்று ஒரு காரணம் சொன்னாலும் நான் ஹோம்லியாக இருப்பதாகவும், அந்த மாதிரி கதாபத்திரம் செட் ஆகாது என்று கூறி எனக்கு ஆபாசான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பும் வரவில்லை. அதைப்போல ஹீரோயினாக கிடைத்த வரவேற்பை விட எனக்கு இந்த மாதிரி குணசித்ர கதாபாத்திரங்களில் நடிப்பதால் அதைவிட பெரிய வரவேற்பு கிடைக்கிறது” எனவும் நடிகை சரண்யா தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…