RIPSeshu : மறைந்த நடிகர் சேஷுவிற்கு சந்தானம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
லொள்ளு சபாவில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் சேஷு. இவர் அடுத்ததாக திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் பிரபலமானார் என்றே கூறலாம். துள்ளுவதோ இளமை, வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், பேரிஸ் ஜெயராஜ், A1 உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
60-வது வயதான இவர் கடந்த 10 நாட்களாக மாரடைப்பால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இவருடைய மறைவு சினிமா துறையில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வருகிறார்கள்.
அந்த வகையில், சென்னையில் சேஷுவின் அவருடைய உடல் வைக்கப்பட்டு இருக்கும் நிலையில், நடிகர் சந்தானம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த சந்தானம் ” எங்களுடைய லொள்ளு சபா குடும்பத்தில் இருந்த ஒருத்தர் சேஷு. அவருடைய மறைவு செய்து இப்படி வரும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. ரொம்ப வருத்தமாக இருக்கிறது.
அவர் மறைவு செய்தியை கேட்டு இவ்வளவு பேர் வந்து இருக்கிறோம். அவர் நல்ல நடிகர் என்பதையும் தாண்டி என்னை பொறுத்தவரை அவர் நல்ல மனிதர். படத்தின் பேச்சுவார்தைகாக நாங்கள் வெளியே சென்று இருந்தோம் அந்த சமயத்தில் இப்படி ஒரு தூயரமான செய்தி எங்களுடைய காதில் வந்தது வேதனை அளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” எனவும் நடிகர் சந்தானம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…