கூலாக மங்காத்தா விளையாடும் சந்தானம்.! வெளியானது “குளுகுளு” போட்டோ.!
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “குளு குளு”. இந்த படத்தை மேயாத மான் திரைப்படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத் மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் ‘லொள்ளு சபா’ சேசு டி.எஸ்.ஆர்பிபின், கவி, ஹரிஷ் யுவராஜ் மௌரி தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
படத்திற்கான மோஷன் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதனை தொடர்ந்து, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
போஸ்டரில், சந்தானம் வாயில் கேரட்டுடன் அமர்ந்து ரம்மி விளையாடி கொண்டிருக்கிறார். இதுவரை. இல்லாத விதமாக புது கெட்டப்பில் சந்தானம் இருப்பதால், இதனை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மேலும் படம் ஜூன் மாதம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Here is the exciting first look of my next #GuluGulu ????#GuluGuluFirstLook
@MrRathna @circleboxE @Music_Santhosh @KVijayKartik @rajnarayanan_ @SonyMusicSouth @Kirubakaran_AKR @proyuvraaj pic.twitter.com/w4H2HGS4Me— Santhanam (@iamsanthanam) May 10, 2022