santhanam [File Image]
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து கலக்கி வருபவர் தான் நடிகர் சந்தானம். இவர் காமெடியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்ப கலாட்டத்தில் எல்லாம் 1 லட்சத்திற்கு மேல் வாங்கி வந்தாராம். அதற்கு பிறகு காமெடி நடிகராக வளம் வந்தவுடன் தனது சம்பளத்தை லட்ச கணக்கில் உயர்த்தி லட்சங்களில் மட்டுமே சம்பளம் வாங்கி வந்தாராம்.
பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பின் அவருடைய படங்களும் நல்ல வசூலை குவித்த காரணத்திற்காகவே ஹீரோவாக நடிக்க 1 கோடி சம்பளம் வாங்கினாராம். இப்போதெல்லாம் நடிகர்கள் தங்களுடைய படங்கள் ஹிட் ஆகிறதோ இல்லயோ தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி வருகிறார்கள். எனவே, நடிகர் சந்தனமும் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாராம்.
தளபதி 68 படக்குழுவுக்கு கண்டிஷன் போட்ட விஜய்! என்ன தெரியுமா?
அதன்படி, சந்தானம் தன்னுடைய சம்பளத்தை தற்போது 3 கோடிக்கு உயர்த்தி இருக்கிறாராம். தற்போது அவர் பில்டப் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காகவே நடிகர் சந்தானம் சம்பளமாக 3 கோடி வாங்கி இருக்கிறாராம். இந்த தகவலை படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் மூலம் தயாரிக்கும் தயாரிப்பாள ஞானவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஞானவேல் ‘ இந்த படத்தில் நடிப்பதற்காக சந்தானத்திற்கு 3 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக நான் அவர் காமெடியான கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்களை தயாரித்த போது லட்ச கணக்கில் சம்பளம் கொடுத்து இருக்கிறேன். இப்போது அவருக்கு 3 கோடி சம்பளம் கொடுக்கிறேன் அவர் 30 கோடி சம்பளம் வாங்கும் ஹீரோவாக உயர வேண்டும்” எனவும் ஞானவேல் கூறியுள்ளார்.
மேலும் நடிகர் சந்தானம் கடைசியாக கிக் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் சரியான விமர்சனத்தை பெறவில்லை. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ’80ஸ்பில்டப்’ படத்தில் சந்தானம் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…