பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் சந்தானம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியீட்டு இருந்தது மிக்பெரிய சர்ச்சையானது. அந்த வீடியோவில் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் இடம்பெற்று இருக்கும் “சாமி இல்லனு சொல்லிட்டு சுத்தன ராமசாமி தான நீ ” என்ற வசனம் கொண்ட ஆடியோவை வைத்து நா அந்த ராமாமி இல்ல டப்ஸ்மாஷ் செய்து வீடியோ வெளியீட்டு இருந்தார்.
வீடியோவை பார்த்த பலரும் பெரியாரை விமர்சித்து இந்த வீடியோவை சந்தானம் வெளியீட்டு இருக்கிறார் என கூறி விமர்சித்தனர். இந்நிலையில், வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வரும் பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து, படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
நான் அந்த ராமசாமி இல்ல! சர்ச்சையில் சிக்கிய சந்தானம்!
அதன் ஒரு பகுதியாக படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் சந்தானம் மற்றும் படத்தில் நடித்த பிரபலங்கள் எல்லாரும் கலந்துகொண்டார்கள். அப்போது விழாவில் பேசிய நடிகர் சந்தானம் ” வடக்குப்பட்டி ராமசாமி படம் யார் மனதையும் புண்படுத்த அல்ல என பொங்கல் வாழ்த்து வீடியோ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசினார்.
இது குறித்து பேசிய சந்தானம் ” படத்தில் ஒரு விஷயம் சமீபத்தில் சர்ச்சையானது. அந்த சர்ச்சையை கேட்டவுடன் தயாரிப்பாளர் என்னிடம் பேசினார். பின் நான் அவரிடம் பயப்படவேண்டாம் படத்தின் ப்ரோமோஷனுக்கு உதவும் என கூறினேன்.
வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் எந்த தவறான விஷயமும் கிடையாது. ரசிகர்களை சிரிக்க வைப்பது மட்டுமே நோக்கம். யார் மனதையும் புண்படுத்த அல்ல. படத்தில் ராமசாமி என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கான விளக்கத்தை நான் கொடுக்க நினைக்கிறன். படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி கவுண்டமணி சாருடைய தீவிரமான ரசிகர்.
நானும் கவுண்டமணியுடைய ரசிகன் தான். இதற்கு முன்னதாக என்னுடைய நடிப்பில் வெளியான படங்களில் கூட சில கவுண்டமணி வசனங்கள் இடம்பெற்று இருக்கும். டிடி ரிட்டர்ன்ஸ் படத்திற்கு பிறகு எனக்கு ஒரு ஹிட் படம் தேவைப்படுகிறது. கண்டிப்பாக இந்த படம் எனக்கு அமையும் என்று நான் நினைக்கிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், நார்வேயின் கார்ல்சன் மற்றும் ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி ஆகிய…
சென்னை: பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், புற்றுநோய்க்காக அமெரிக்காவில் உள்ள மியாமி மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்…
நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…
சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…