மீண்டும் காமெடியனாக களமிறங்கும் சந்தானம்.? ‘AK62’ படத்தின் புத்தம் புது அப்டேட்.!
நடிகர் சந்தானம் ஒரு காலகட்டத்தில் பல நடிகர்களுடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்தார். பிறகு காமெடி ரூட்டை மாற்றி ஹீரோவாக மட்டுமே படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும், அவர் மீண்டும் முந்திய காலகட்டத்தை போல காமெடியனாக நடிப்பாரா என பலரும் ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது ஒரு புதிய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அது என்னவென்றால், நடிகர் சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்கவுள்ளாராம். ஆம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கவுள்ள “AK62” படத்தில் தான் சந்தானம் காமெடியனாக களமிறங்கவுள்ளாராம்.
இதையும் படியுங்களேன்- சூர்யா 42 படத்தின் சூப்பர் எதிர்பாராத அப்டேட்.! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே?
இந்த படத்தில் அவர் நடிக்கவுள்ளதற்கான பேச்சுவார்தையும் முடிவடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கூடுதல் தகவல் என்னவென்றால், “AK62” திரைப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக பிரபல நடிகரான அரவிந்த் சாமியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்கவுள்ளதாக பரவும் தகவலால் அவருடைய ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், “AK62” படத்திற்கான படப்பிடிப்பு வரும் ஜனவரி 17-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.