மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சஞ்சனா! வாய்ப்பு கொடுக்கும் விஜய் டிவி?
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரே நாளில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சஞ்சனா மீண்டும் இந்த வாரம் நிகழ்ச்சிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் வழக்கமாக இரண்டு வாரங்கள், அல்லது ஒரு வாரங்கள் கழித்துத்தான் எலிமினேஷன் சுற்று வைக்கப்பட்டு ஒரு போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். ஆனால், இந்த முறை ஆட்டமும் புதுசு, ஆளும் புதுசு என முன்னதாக கூறியிருந்ததை போல திடீர் ட்வீஸ்ட்டாக பிக்பாஸ் வீட்டிலிருந்து ஒரே நாளில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவதாக டாஸ்க் வைக்கப்பட்டது.
அந்த நேரடி எலிமினேஷன் தேர்வுக்குரிய டாஸ்கின் போது நேரடியாக சஞ்சனாவை பலரும் நாமினேட் செய்த காரணத்தினால் சஞ்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரே நாளில் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். கண்ணீருடன் கலங்கி வீட்டை விட்டு வெளியேறியது இது பிக் பாஸ் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மகாராஜா படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த சஞ்சனா வயதில் மிகவும் சிறிய பெண் தான். எனவே அவருக்கு இவ்வளவு வாய்ப்பு கிடைத்தும் அதற்குப் பலன் இல்லாமல் வேகமாக அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது அதிர்ச்சி அளிப்பதாகவும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய ஆதங்கத்தைக் கொட்டினார்கள்.
எனவே ரசிகர்கள் பலரும் அவர் வீட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புவதால் அவருக்கு மற்றொரு வாய்ப்பு கொடுத்து அவர் எப்படி விளையாடுவார் என்று பார்க்கலாம் என ஆசைப்பட்டனர். எனவே இதனைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட விஜய் தொலைக்காட்சி இந்த வாரம் தொடக்கத்தில் சஞ்சனாவை, மீண்டும் வீட்டிற்குள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இப்படியான தகவல் கேட்பதற்கு ஒரு பக்கம் நன்றாக இருந்தாலும், போட்டியின் விதிமுறைகள் என்று ஒன்று இருக்கிறது.அவரை மீண்டும் கொண்டு வந்தால் அதற்கு அடுத்ததாக வெளியேறும் போட்டியாளர்களையும் திரும்பிக் கொண்டு வரவில்லை என்றால் அவர்களுடைய ரசிகர்கள் கேள்விகளை எழுப்புவார்கள். இது நிகழ்ச்சிக்கு ஒரு எதிர்மறையான விமர்சனங்களாக அமைந்துவிடும்.
எனவே, விஜய் தொலைக்காட்சி இதெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு தான் சரியான முடிவை எடுக்கவேண்டும். உண்மையில் சஞ்சனாவை இந்த வாரம் சர்ப்ரைஸாக கொண்டு வருகிறார்களா அல்லது இது வெறும் வதந்தியா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.