நடிப்பில் மிரட்டிய கீர்த்தி சுரேஷ்.! டீசருடன் வெளியான “சாணிக் காயிதம்” ரிலீஸ் தேதி.!
ராக்கி படத்தை இயக்கத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அருண் மாதேஷ் வரண் அடுத்தாக செல்வராகவன் -கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து “சாணிக் காயிதம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இந்தப் படமும் ராக்கி திரைப்படத்தை போலவே ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறை நிறைந்த கதைக்களமாக இருக்கும் என படத்தின் பர்ஸ்ட் லுக் பார்த்தவுடனே ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்தநிலையில் , தற்போது “சாணிக்காயிதம்” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. எதிர்பார்த்தது போலவே டீசரில் மௌனமான வன்முறை இடம் பெற்றுள்ளது. இந்த டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
படத்தில் செல்வராகன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் இந்தப் அண்ணன், தங்கையாக நடித்துள்ளனராம். டீசரில் கையில் துப்பாக்கியுடன் பழி வாங்கும் வசனங்கள் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
டீசரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகியுள்ளது. மேலும் இந்த படம் வரும் மே மாதம் 6-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாகவும் டிரைலரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Happy to release the trailer of saani kaayidham. All the very best to @selvaraghavan @ArunMatheswaran @KeerthyOfficial and the entire team. God bless
Tamil – https://t.co/KVSIrvRY5L
Telugu – https://t.co/htEGyclSO1— Dhanush (@dhanushkraja) April 22, 2022