தீபாவளி ரேசில் பின்வாங்கிய விஜய் சேதுபதி ! சங்கத்தமிழன் வெளியாகாது!வெளியான அறிவிப்பு

சங்கத்தமிழன்’ திரைப்படம் தீபாவளியன்று வெளியாகாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகி உள்ள திரைப்படம் சங்கத்தமிழன். இந்த திரைப்படத்தை வாலு, ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கிய விஜய்சந்தர் இயக்கியுள்ளார். நிவேதா பெத்துராஜ், ராசி கண்ணா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.மேலும் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனால் தீபாவளிக்கு விஜயின் பிகில்,கார்த்தியின் கைதி ஆகிய திரைப்படத்துடன் சேர்த்து சங்கத்தமிழன் திரைப்படம் வெளியாக இருந்தது.
ஆனால் தயாரிப்பு தற்போது அறிவிப்பு ஓன்று வெளியாகியுள்ளது. அதாவது சங்கத்தமிழன்’ திரைப்படம் தீபாவளியன்று வெளியாகாது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது .நவம்பர் 8 அல்லது 15-ம் தேதி வெளியிடப்படும் எனவும் தயாரிப்பு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025