சங்கமித்ராவின் சைலன்ட் சம்பவம்.! அண்ணாச்சியை அணுகிய சுந்தர் சி.. மிரண்டு போன திரையுலகம்.!
ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் கனவு திரைப்படம் என்று ஒரு திரைப்படம் இருக்கும். அப்படி சுந்தர் சி -க்கு கனவு திரைப்படம் என்றால் “சங்கமித்ரா”. மிகப்பெரிய பட்ஜெட்டில் ஜெயம் ரவியை வைத்து இயக்குனர் சுந்தர் சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்க திட்டமிட்டிருந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்படவிருந்த இந்த திரைப்படம் சில காரணங்களால் அப்டியே முடங்கிவிட்டது. விரைவில் இந்த திரைப்படம் மீண்டும் தொடங்கலாமா என நம்ம தக்க சினிமா வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில், இயக்குனர் சுந்தர் – சி சரவணன் அருளை சமீபத்தில் ரகசியாக சந்தித்து பேசியுள்ளாராம்.
இதையும் படியுங்களேன்- முந்தானையை பறக்கவிட்டு இளசுகளின் மனதை கவர்ந்த ‘விருமன்’ அதிதி… சொக்கவைத்த அந்த க்ளிக்ஸ்.!
மேலும், சுந்தர் சி மீண்டும் இயக்கவுள்ள “சங்கமித்ரா” திரைப்படத்தில் சரவணன் அண்ணாச்சியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைக்காகதான் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது. இந்த தகவல் உண்மையானால் கண்டிப்பாக இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரவணன் அண்ணாச்சி கடைசியாக தி லெஜண்ட் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதைபோல் சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காஃபி வித் காதல் படமும் சரியான விமர்சனத்தை பெறவில்லை.