சுந்தர்.சி இயக்க தேனாண்டாள் தயாரிக்க பிரமாண்ட சரித்திர பின்னணி கொண்ட படமாக உருவாக இருந்து கைவிடப்பட்ட சங்கமித்ரா மீண்டும் உருவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.
பாகுபலி எனும் பிரமாண்ட திரைப்படம் வெளியான புதிதில், நம்ம கோலிவுட்டில் இருந்து பிரமாண்டமாக அறிவிக்கப்பட்ட பிரமாண்ட சரித்திர பின்னணி கொண்ட திரைப்படம் சங்கமித்ரா. இதில் அனைவருக்கும் ஆச்சர்யம் என்னவென்றால் படத்தின் இயக்குனர் சுந்தர்.சி என அறிவிப்பு வெளியானது தான்.
அவர் குறைந்த பட்ஜெட்டில் காமெடி கமர்சியல் படங்களை எடுத்து தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் பார்த்துக்கொடுப்பவர். அவர் எப்படி இந்த பிரமாண்ட படத்தை கையாள போகிறார் என்பதே.
அதிலும் படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடிக்க உள்ளனர் என கூறப்பட்டது. தேனாண்டாள் பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்க , இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், நிதி பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.
தற்போது வெளியான தகவல் என்னவென்றால், மீண்டும் சங்கமித்ரா உருவாக வேலைகள் நடைபெற்று வருகிறதாம். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாம். ஆர்யாவுக்கும், ஜெயம் ரவிக்கும் தற்போது நல்ல மார்க்கெட் உள்ளதால் படம் உருவாக அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. விரைவில் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை,
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…