சங்க தமிழன் திரைப்படத்தின் புதிய அப்டேட்!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், தற்போது சங்கத்தமிழன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை இயக்குனர் விஜய சந்தர் இயக்குகிறார். இந்நிலையில், இப்படத்தில், இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ள ‘சண்டைக்காரி நீதான், என் சண்டக்கோழி நீதான்’ என்ற பாடல் இன்று மாலை 7 மணியளவில் வெளியாகவுள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025